Friday, April 9, 2010

Madappuram Bhadrakali

Madappuram Bhadrakali

By

P.R.Ramachander

Madappuram is a small village near Thiruppuvanam of Shivagangai district. It seems once when there was huge deluge; Madhurai Meenakshi Amman asked her consort Lord Shiva to show her the boundary of Madhurai He became a huge serpent and lay down in the water in a circular form. The place where the mouth of the snake touched its tail is the present Madappuram. Later it seems once; Lord Shiva and Meenakshi came here for hunting. By the time they reached Madappuram, Meenakshy was terribly tired. So Lord Shiva asked her to take rest there and Asked Ayyanar to guard over her. Later it seems Shiva blessed that if any one takes bath in Vaigai River near this village, he would get more punyam than taking bath in Ganges itself. From that time Mother Meenakshi is staying in this village in the form of Bhadrakali. The Ayyanar who is with her is called Adaikkalam Ayyanar (Ayyanar who gives protection) . Main worship is of course to Bhadrakali. She stands there thirteen feet high guarded on both sides by two Boothas. A very gigantic horse stands raising its legs over the Bhadrakali. It seems one devotee prayer to her that he wanted to be with her always. Then Bhadrakali made him in to a horse and gave him a place behind her. She holds a trident and has a crown of fire. She likes lime fruit. The devotees offer her a lime fruit garland. If the garland has to put on her, it has to be made of 100 lime fruits. If it is to be put over the horse also 1000 fruits are required.
This Bhadrakali is considered as court by the people here. Outside her temple there is a small mound. Both the prosecutor and defender come here and after a lighting a lamp take an oath that what they are telling is truth and go back. It seems within 30 days , the one who takes false oath will be severely punished. Some times, they would not be even able to cross the village limits. The punished people should come gain to the temple compensate the other party and give fine to her.
Poor people fighting against injustice done by rich people come here with wet cloths and go near a Pattyakkal installed here. There would be a knife and hammer there. They have to state their complaint and cut a coin and put it there. Bhadrakali gives severe punishment to the person against whom the complaint is lodged.
It seems once upon a time judges used to come here along with both parties and ask them to take an oath in front of Bhadrakali. There is a neem tree behind Bhadrakali. People praying for marriage and children come here and pray . It seems their prayer is answered immediately. On Tuesdays and Fridays, there is a huge crowd at this temple. There are no festivals for Bhadrakali.

1 comment:

  1. மேல் கண்ட கட்டுரையின் தமிழாக்கம் கீழே தரப்பட்டு உள்ளது.

    மாடபபுரம் பத்ரகாளி
    பீ. ஆர். ராமச்சந்திரா

    சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனத்தின் அருகில் உள்ளதே மாடப்புரம் என்கின்ற கிராமம். ஒரு முறை உலகில் பிரளயம் தோன்றியது. அனைத்தும் முழுகி விட மதுரை மீனாக்ஷி தன்னுடைய கணவரான சிவபெருமானிடம் மதுரையின் எல்லை எது என்பதை காட்டுமாறு கேட்டுக் கொண்டாள். ஆகவே அவர் தன்னை ஒரு மிகப் பெரிய பாம்பாக்கிக் கொண்டு அந்த நீரை அப்படியே வளைத்துப் பிடிக்க அவருடைய நாக்கு வாலை தொட்ட இடமே மாடப்புரம் என்பதை புரிந்து கொண்டாள். ஒரு முறை அவளும் சிவனாரும் வேட்டையாடச் சென்றனர். மதுரை மீனாக்ஷி களைத்து விட்டாள். ஆகவே சிவனார் அவளை அங்கேயே (மாடப்புரத்தில்) தங்குமாறு கூறிவிட்டு துணைக்கு ஐயனாரையும் வைத்து விட்டுச் சென்றார். ஐயனார் அவளுக்கு துணையாக அங்கு உள்ளார். எவர் ஒருவர் வைகை நதியில் நீராடுகிறார்களோ அவர்களுக்கு கங்கையில் குளித்த புண்ணியத்தை விட அதிக புண்ணியம் கிடைக்கும் என சிவனார் கூறினார். அது முதல் மதுரை மீனாக்ஷி அங்கு பத்ரகாளியாக உள்ளாள். ஐயனாரை அடைக்கலம் ஐயனார் என அழைகின்றார்கள். அந்த ஆலயத்தில் மூல பூஜை பத்ரகாளிக்கே நடைபெறுகின்றது. அவள் சிலை சுமார் பதிமூன்று அடி உயரம் உள்ளது . அவளுடைய இரு பக்கத்திலும் பூத கணங்கள் உள்ளன. ஒரு பக்தர் தான் என்றும் அவளுடன் இருக்க விரும்பியதினால் அவருக்கு தன் பின்னால் நிற்க இடம் தந்தாள். அவர் மிகப் பெரிய குதிரையாக அவள் பின்னால் தனது முன்னங்கால்கள் இரண்டையும் அவள் தலைக்கு மேல் தூக்கிப் பிடித்தபடி நிற்கின்றார். அவள் தன் கையில் ஒரு திரிசூலத்தை வைத்துக்கொண்டும், எரிந்து கொண்டு உள்ள கிரீடத்தை தலையில் அணிந்து கொண்டும் காட்சி தருகிறாள். அவளுக்கு எலுமிச்சை பழம் பிடிக்கும் என்பதினால் அந்த மாலை அணிவிக்கப்படுகின்றது. அவளுக்கு மட்டும் அணிவிக்க வேண்டும் எனில் நூறு பழம் வேண்டும். குதிரைக்கும் சேர்த்து என்றால் ஆயிரம் பழங்கள் வேண்டும்.
    அந்த ஆலயத்தை நீதியின் இடம் என்கிறார்கள். ஆலயத்தில் அவளுக்கு முன்னால் ஒரு மேடு உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரும், குற்றம் சுமத்தப்பட்டவரும் அங்கு வந்து அந்த மேட்டில் நின்று கொண்டு தத்தம் வாதத்தை வைக்க வேண்டும். பொய் கூறுபவர் முப்பது நாட்களுக்குள் ஏதாவது ஒரு விதத்தில் தண்டனையை பெறுகிறார் . சில சமயங்களில் அவர்களால் அந்த கிராமத்தின் எல்லையைக் கூட கடக்க முடியாமல் ஆகிவிடுமாம். ஆகவே தண்டனை பெற்றவன் மீண்டும் ஆலயத்துக்கு வந்து பத்ரகாளிக்கு காணிக்கை செலுத்தி, குற்றமற்றவனுக்கும் அபராதமாகஏதாவது தொகை தர வேண்டுமாம்.
    பணக்காரர்களினால் கொடுமை இழைகப்பட்டவர்கள் ஈரத் துணி உடுத்தி அங்கு வந்து பட்டயக்கல் எனக் கூறப்படும் இடத்தில் நின்று கொண்டு ஒரு நாணயத்தை அங்குள்ள கத்தி மற்றும் சுத்தியலினால் இரண்டாக உடைத்து அங்கே போட வேண்டும். அதை செய்தால் அவர்களை கொடுமை படுத்தியவர்களை பத்ரகாளி கடுமையாக தண்டிப்பாளாம் .
    ஒரு சமயத்தில் நீதிபதிகளே குற்றம் சாட்டப்பட்டவரையும் , குற்றம் சுமத்தப்பட்டவரையும் அங்கே அழைத்து வந்து அவர்கள் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்ட பின் வழக்கை விஜாரிப்பார்களாம். பத்ரகாளிக்கு பின் புறத்தில் வேப்ப மரம் உள்ளது. குழந்தை வரம் வேண்டுபவர்கள் மற்றும் திருமணத் தடை விலக என அங்கு வருவது உண்டாம். அவை உடனேயேநடைபெறுகின்றனவாம். அந்த ஆலயத்தில் விழா எதுவும் கிடையாது. செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் நிறைய கூட்டம் வருகின்றது.
    (Translated into Tamil by Santhipriya)

    ReplyDelete