Pattalamman, Chandana Karuppu and Dombarai amman
By
P.R.Ramachander
Kullapuram is a small village which is 12 km fro m Aandi patti of Theni district. It is on the banks of Koottaru. The people of this village were completely dependent on waters of this river. Two brothers called Ammiyappan and Kuzhaviyappan, both of whom were barbers came to settle down in this village. They both knew magic and brought with them their Gods Pattalamman and Chandana Karuppu. They consecrated these Gods in both sides of the village. Ammiyappan had a pretty daughter. Once Ammiyappan and Kuzhaviyappan had gone to a nearby village At that time one black magician came and stopped the flow of the river much above the village by his magic. He challenged the villagers to get the water released. The villagers went to Ammiyappan’s house for help. Ammiyappan’s daughter agreed to help. With great faith in Pattalamman and Chandana Karuppu ,he sent her magical spells. The water in the river was released. She also killed the black magician. When the brother’s returned they were shocked by the action of their daughter. According to them she did not have power to do such magic and if some thing had gone wrong, the entire village would be affected. They decided to sacrifice her. They decided to offer Padayal worship to Chandana Karuppu. During these times food would e stored in a deep mud pit called Dombarai. They asked their daughter to get some food item. When she was inside, they covered the Dombarai. After killing of their daughter both of them found that their magic was not effective. They realized that their daughter was Pattalamman herself. Ammiyappan committed suicide by jumping in to the river. Afterwards, the people of the village started worshipping the daughter of Ammiyappan at the spot where she was killed. They started calling her Dombarai Amman.
The day before Chithra Pournami, the festival starts in the village. First they sacrifice a white cock at the point of the river where Ammiyappn committed suicide. Then they offer Padayal to Chandana Karuppar. This contains Drum stick and eggs. Near the temple is a very deep well constructed by Ammiyappan by his magical powers by summoning two Bhoothas. They first offer the Padayal to them. Then along with materials for worship of Chandana Karuppu kept in a box they go the river. These are washed and they return to the Chandana Karuppu Temple by mid night. Then they sacrifice goats to Karuppu.
Next day (Chithra Pournami) the worship for Pattalamman is started. For this every year they decorate the Pattalamman statue kept in Chandana Karuppu temple Then they start worshipping Dombarai Amman. The unmarried girls of the families worshipping Dombarai Amman offer Kozhakattai (rice ball) and Kamma Urundai to this Goddess. These are given to the girls for eating. One of them goes in to a trance and she will carry materials for worship of Pattalamman to he river. She gets them washed in the river and brings back. After this , worship of Pattalammn is performed. The worship and sacrifice of goats takes place.
People affected by evil spirits come to these temples and are cured.
மேல் கண்ட கட்டுரையின் தமிழாக்கம் கீழே தரப்பட்டு உள்ளது.
ReplyDeleteபட்டாளம்மன், சந்தனக் கருப்பு மற்றும் டொம்பாறை அம்மன்
பீ. ஆர். ராமச்சந்திரா
தேனீ மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டியில் இருந்து பன்னிரண்டு கிலோ தொலைவில் உள்ளது கல்லுப்புரம் என்ற கிராமம். அங்கு கோட்டாறு என்ற நதி உள்ளது. அந்த நதியின் நீர்தான் கிராமத்து மக்களின் உபயோகத்துக்கு என இருந்தது . அம்மையப்பன் மற்றும் கழுவியப்பான் என்ற இரண்டு சகோதரர்கள் அங்கு வந்து தங்கினார்கள். அவர்கள் முடி வெட்டும் தொழில் செய்பவர்கள். அவர்களுக்கு மந்திரக் கலைகள் தெரியும் என்பதினால் தங்களுடன் பட்டாளத்து அம்மன் மற்றும் சந்தனக் கருப்பின் சிலைகளையும் கொண்டு வந்து இருந்தனர். அவர்கள் அவற்றை கிராமத்தின் இரண்டு திசைகளிலும் கொண்டு வைத்து விட்டனர். அம்மையப்பனுக்கு ஒரு அழகான மகள் இருந்தாள். ஒரு நாள் அந்த இருவரும் பக்கத்து ஊருக்கு சென்று இருந்த போது அங்கு வந்த வேறு ஒரு மந்திரவாதி அந்த நதியின் ஓட்டத்தை ஒரு இடத்தில் மந்திரத்தால் கட்டிப் போட்டு நிறுத்திவிட்டான். கிராமத்தினரை முடிந்தால் அங்கிருந்து தண்ணீரை எடுத்துச் செல்லுமாறு கூற அவர்கள் அம்மையப்பனின் உதவியை நாட அவர் வீட்டுக்குச் சென்றனர் . அப்போது அங்கு இருந்த அவர் மகளும் அதற்கு உதவ முன் வந்தாள். அவளுக்கு பட்டளத்தம்மன் மற்றும் சந்தனக் கருப்பின் மீது நம்பிக்கை அதிகம் உண்டு. அவர்கள் உதவியுடன் அந்த நதியின் நீரை மீண்டும் ஓடச் செய்து அந்த மந்திரவாதியையும் கொன்றாள் . வீடு திரும்பிய சகோதரர்கள் அதைக் கண்டு திகைத்தனர். அவர்கள் நினைத்தனர் அவளுக்கு அந்த சக்தி கிடையாது எனும்போது எங்கிருந்து வந்தது சக்தி? எதோ விபரீதம் நடந்து உள்ளது, அது கிராமத்தை பாதிக்கும் என நினைத்தனர். ஆகவே அவளை பலி கொடுக்க முடிவு செய்தனர். சந்தன கருப்புக்கு படையல் தருவதாகக் கூறி அவளை அதற்கான உணவு எடுத்து வருமாறு கூறினார்கள். டொம்பாறை என்ற இடத்தில் மண்ணுக்குள் அடியில் உணவு மறைத்து வைக்கப்பட்டு இருக்கும். அவள் உணவை எடுக்க உள்ளே சென்றபோது அதன் வழியை மூடிவிட்டனர். இப்படியாக அவளை கொன்ற பின் அவர்களால் மீண்டும் மந்திரத்தை உபயோகிக்க முடியவில்லை. அவளே ஒரு வேளை பட்டாளத்து அம்மனோ என எண்ணி அம்மையப்பன் நதியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு அந்த கிராமத்தினர் அவளை எந்த இடத்தில் கொன்றார்களோ அந்த இடத்தில் அவளை டொம்பாறை அம்மன் என பூஜிக்கத் துவங்கினார்கள்.
சித்ரா பௌர்ணமிக்கு முன் திருவிழா துவங்கும். அம்மையப்பன் தற்கொலை செய்து கொண்ட இடத்தில் ஒரு கோழி பலி தரப்படும். சந்தன கருப்பருக்கு படையல் தரப்படும். அது முருங்கை காயும் முட்டையும் கொண்டு தயாரிக்கப்பட்டது. இரண்டு பூதங்களின் துணையோடு அம்மையப்பன் ஆலயத்துக்கு அருகில் ஒரு கிணறை வெட்டி இருந்தார். அங்கு அவர்களுக்கு முதலில் படையல் தரப்படுகின்றது. அதன் பின் நதிக்கு செல்வார்கள். அங்கு பெட்டியில் வைத்து எடுத்துச் செல்லப்படும் சந்தனக் கருப்பை நீராட்டி நடு இரவில் எடுத்து வருவார்கள். அங்கு ஆடுகள் பலியாகத் தரப்படும். சித்ரா பௌர்ணமி அன்று பட்டாளத்தம்மானின் வழிபாடு நடக்கும். அவளை ( அவள் சிலையை) நன்கு அலங்கரிப்பார்கள். அவளை டொம்பாறை அம்மனாக கருதி வழிபடுவார்கள். திருமணம் ஆகாத பெண்கள் கொழுக்கட்டை மற்றும் கம்மா உருண்டையை நேவித்யமாக படைப்பார்கள். அவர்களில் ஒருவளுக்கு சாமி வந்து விடும். அவளே பூஜை சாமான்களை எடுத்துச் செல்வாள். அவற்றை நதியில் அலம்பி எடுத்து வந்து வழிபடுவார்கள். ஆடுகள் பலி தரப்படும். ஆவிகளால் பிட்க்கப் பட்டவர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து வழிபடுவார்கள்.
(Translated into Tamil by Santhipriya)