Maya Kuruvi – Chamayi of Mukkudi
By
P.R.Ramachander
Mukkudi is a village in between Shiva Ganga and Madhurai. There is no proper transport facility to reach this village. The Maya Kuruvi- Chamayi temple is in the eastern part of the village.
Once upon a timer a cobbler couple was living in this village. They did not have any children. Some people advised them to go and pray in the Azhagar temple. They went and prayed the God and slept there for one night. In their dream Mayan (Lord Vishnu) came and told them that he has blessed them with a son. Please name him as Maya Kuruvi.” He chose one cow herd boy and sent him to be born as their son. That boy told him, “I alone cannot go there. Please send some body else for company.” Lord Vishnu agreed. He chose one girl who was making garlands for Rakkachi Amman, who is at the top of Azhagar Mountain and sent her as a girl child to a village called Chithalakudi. Since she was born at midnight, her parents decided to call her Chamayi.
The parents of Maya Kuruvi were cobblers. When they did not get much of that job, they used to go as farm workers. His mother would take Maya Kuruvi along with her. One day when she went to work, she made a hammock with a cloth and hung Maya Kuruvi on a tree branch on a river shore. That day her work was on the other side of the river. She crossed the river and went for work. Mayan wanted to play with Maya Kuruvi and created a huge flood in the river and torrential rain. A five hooded serpent protected Maya Kuruvi from the rain and a sheep gave him milk. Maya Kuruvi’s mother was able to cross the river only after three days. When she came she was surprised to find Maya Kuruvi hale and healthy. When she tried to carry the child from the Hammock, the serpent wanted her to take an oath, that none of their family members would ever hurt any serpent. The sheep wanted her to promise that none of her family members would ever eat the meat of a sheep. Grateful for them, Maya Kuruvi’s mother promised as they asked and went back home with her precious child.
The next day she left the baby with her husband and went out. At that time Maya Kuruvi’s father who did not know about the oath, cut the only sheep they had and cooked the meat and its blood. All the people who ate became blind. Hearing this Maya Kuruvi’s mother rushed back. And then made all of them take an oath, keeping the meat on Kuruvi that will never, ever take sheep’s meat. They all got their sight back.
Maya Kuruvi grew up and became a lad. At that time one hunter brought a bird called “Vallathan Kuruvi”. Maya Kuruvi wanted that bird as a pet. They made a slipper for the hunter and he gave Vallathan Kuruvi as pet to Maya Kuruvi,
Once for the famous Chithirai festival, Maya Kuruvi went along with his parents to Madhurai. Chamayi had also come along with her parents. Both parents met and decided on the marriage f Maya Kuruvi and Chamayi, They also fixed a date for the marriage. When this was going on Maya Kuruvi one day went to take bath in the pond. He kept his pet Vallathan Kuruvi on that shore. That Kuruvi went and sat in a big hole on a tree. Maya Kuruvi climbed the tree. When he was trying to catch his pet, A snake in the hole bit him(according to instructions of Mayan). Some one went and told this to his mother. She rushed there and Maya Kuruvi died keeping his head on the lap of his mother.
When they try to cremate him, some how they were not able to light the pyre. Then his mother in god’s trance told, “The pyre will burn, only if Chamayi comes and lights it.” So they sent word to Chamayi. Chamayi rushed to the place throwing the pot she was carrying on the floor. She requested for fire to light the pyre from several houses. None of them gave her the fire. Then went and asked the king of Siva Ganga. He was convinced about her greatness and gave her fire taken three times by a golden trowel. She tied the fire in her sari and came to the cremation ground. She made the eyes of all people blind for a moment, lit the pyre and jumped in to it. She also threw the Vallathan Kuruvi and the snake that bit Maya Kuruvi in the fire.
Then the people of Mukkudi understood that Maya Kuruvi and Chamayi were gods born amidst them. They started worshipping them. Since their community people were cobblers, these Gods told them to have festival only once in two years. They said in between these festivals, nothing should be spent on their worship. So no temple was built for them. The festival is celebrated in Vaikasi month (May-June). The statues of these Gods are only made then. Maya Kuruvi statue has a Vallathan Kuruvi in his hands and Chamayi has a pot kept in her hip. These statues are made by a Velar family, which lives south of this village
From the village the new statues are brought in the wedding dress. The old statues are removed and the new statues are installed. Around 11 PM, they offer Pongal to the Gods. Then there is lot of merrymaking for two days. On the third day at the spot where Maya Kuruvi and Chamayi was created, hundreds of families offer Pongal. That day and the next day several goats are sacrificed.
Obeying the oath given by Maya Kuruvi’s mother, none of the descendents of the villagers of Mukkudi eat sheep meat. They also do not trouble snakes. It seems wherever they go snakes do not harm them.
மேல் கண்ட கட்டுரையின் தமிழாக்கம் கீழே தரப்பட்டு உள்ளது.
ReplyDeleteமாயக் குருவியும் முக்குடி சாமாயியும்
பீ. ஆர். ராமச்சந்திரா
சிவகங்கா மற்றும் மதுரைக்கு இடையில் உள்ளதே முக்குடி என்ற கிராமம். அதை அடைவது கடினம். அங்கு செல்ல நல்ல சாலை இல்லை. மாயக் குருவி சாமாயி ஆலயம் அதன் கிழக்குப் பகுதியில் அமைந்து உள்ளது. அங்கு வெகு காலத்துக்கு முன்னால் ஒரு செருப்பு தைக்கும் ஒரு தம்பதியினர் வசித்து வந்தனர். அவர்களுக்கு குழந்தைகள் பிறக்கவில்லை. ஆகவே அவர்களை மலை மீது இருந்த அழகர் ஆலயத்துக்குச் சென்று வேண்டிக் கொள்ளுமாறு கிராமத்தினர் கூறினார்கள். அவர்களும் அங்கிருந்த அழகர் ஆலயத்துக்கு சென்று அன்று இரவு அங்கேயே படுத்து உறங்கினார்கள். அவர்கள் கனவில் தோன்றிய மாயன் (விஷ்ணு) அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கும் எனவும் அதற்கு மாய குருவி என்ற பெயர் வைக்க வேண்டும் எனவும் கூறிவிட்டு மறைந்தார். அதன் பின் ஒரு ஆட்டு இடையனை அவர்களது குழந்தையாகப் பிறக்க அனுப்பினார். ஆனால் அவனோ தான் தனியாகச் சென்று பிறக்க முடியாது எனக் கூறி தன்னுடன் இன்னும் எவரையாவது அனுப்புமாறு கேட்டான். அதற்கு ஒப்புக் கொண்ட விஷ்ணுவும் அழகர் மலைக்கு தினமும் பூ மாலை தந்து கொண்டு இருந்த ராக்காச்சி அம்மாள் என்பவளை சித்தலக்குடி என்ற ஊரில் பிறக்க வைப்பதாகக் கூறினார் . அவள் நடுஇரவில் பிறந்ததினால் அவள் பெயரை சாமாயி என வைத்தனர்.
மாயக் குருவியின் பெற்றோர்கள் செருப்பு தைப்பவர்கள். அவர்களுக்கு அங்கு அதிக வருமானம் இல்லை என்பதினால் அவர்கள் நதிக்கு அந்தப் பக்கத்தில் இருந்த ஒரு பண்ணைக்கு சென்று வேலை பார்த்து வந்தார்கள். தினமும் மாயக் குருவியின் தாயார் அவனையும் வேலைக்கு செல்லும்போது அழைத்துச் செல்வாள். ஒரு நாள் அவள் வேலைக்குப் போகும் முன் நதிக்கு அருகில் இருந்த மரத்தில் ஒரு துளியைக் கட்டி அதில் குழந்தையை தூங்க வைத்து விட்டு நதிக்கு அந்த பக்கத்தில் இருந்த இடத்துக்கு வேலைக்குச் சென்றாள். விஷ்ணு அவர்களுடன் விளையாட நினைத்தார். பெரும் மழையையும், அந்த நதியில் பெரும் வெள்ளத்தையும் திடீர் என ஏற்படுத்தினார். மாயக் குருவிக்கு பாதுகாப்பாக இருக்க ஒரு ஐந்து தலை நாகப்பாம்பை அனுப்பினார். ஒரு ஆடு வந்து தினமும் பால் தந்தது . அந்த குழந்தையின் தாயார் பதறினாள். நதியில் வெள்ளத்தினால் வர இயலவில்லை. மூன்று நாட்கள் பிறகே அவளால் வர முடிந்தது. வந்து பார்த்தவள் ஆச்சரியம் அடைந்தாள். குழந்தை நல்லபடியாகவே இருந்தது. அதை தூக்கப் போனபோது ஐந்து தலை பாம்பு வந்து அவள் இனிமேல் பாம்புகளை கொல்வது இல்லை என சத்தியம் செய்தது தந்தால் மட்டுமே குழந்தையை எடுத்துச் செல்ல அனுமதிப்பேன் என்றது. அது போல ஆடும் வந்து இனி அவர்கள்ஆட்டு மாமிசம் சாப்பிட மாட்டேன் என சத்தியம் வாங்கிக் கொண்டது. அந்த இருவருக்கும் தன் குழந்தையை அதுவரை பாதுகாத்து வந்ததற்கு நன்றி கூறி விட்டு அவை கேட்ட சத்தியத்தையும் தந்து விட்டுச் சென்றாள்.
மறு நாள் மாயக் குருவியின் தாயார் குழந்தையை தனது கணவரிடம் விட்டு விட்டு வேலைக்குச் சென்றாள். மாயக் குருவியின் தந்தைக்கு தனது மனைவி தந்து இருந்த சத்தியம் பற்றித் தெரியாது என்பதினால் வீட்டில் இருந்த ஒரே ஒரு ஆட்டை வெட்டி அதன் கறியை மற்றவருக்கும் தந்து தானும் சாப்பிட அதை உண்ட அனைவருக்கும் கண்கள் குருடாயின. வீடு திரும்பிய மாயக் குருவியின் தாயார் நடந்ததைக் கண்டு அவர்கள் அனைவறையும் இனி தாம் ஆட்டின் மாமிசத்தை சாப்பிட மாட்டோம் என சத்தியத்தைப் பெற்றுக் கொண்டு குருவி மீது அந்த மாமிசத் துண்டை வைக்க அனைவரும் கண் பார்வையை திரும்பப் பெற்றனர்.
மாயக் குருவி வளர்ந்து பெரியவன் ஆனான். ஒரு நாள் ஒரு வேடன் வந்து வல்லாத்தான் குருவி என்ற பறவையைக் காட்ட அதை வாங்கி வளர்க்க மாயக் குருவி நினைத்தான். அந்த வேடனுக்கு ஒரு செருப்பை விலையாகத் தந்து அதை வாங்கிக் கொண்டான்.
.........continued below
.......continued from above
ReplyDeleteசித்திரை மாத திருவிழா ஒன்றின் போது மாயக் குருவி தனது பெற்றோர்களுடன் மதுரைக்கு சென்று இருந்தான். அப்போது சாமாயியும் அவளுடைய பெற்றோர்களுடன் அங்கு வந்து இருந்தாள். இரு குடும்பமும் நட்பாக மாறி மாயக் குருவிக்கும் சாமாயிக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். திருமணத்துக்கு நாள் குறித்து விட்டனர். ஒரு நாள் குளத்தில் குளிக்கச் சென்ற மாயக் குருவி தனது வளர்ப்பு குருவியான வல்லாத்தான் குருவியை கரையில் விட்டு விட்டு குளித்து விட்டு வந்தான். அந்தக் குருவி அருகில் இருந்த ஒரு மரத்தின் பொந்துக்குள் சென்று அமர்ந்து கொண்டு இருந்தது. ஆகவே குளித்தப் பின் மாயக் குருவி மரத்தின் மீது ஏறி அதை எடுத்து வர முயல அந்த பொந்தில் இருந்த பாம்பு ஒன்று அவனை கடித்து விட்டது. ( அந்த நாடகத்தை மாயனே செய்து இருந்தார் ) . அவன் மயங்கி கீழே விழுந்தான். உடனே மற்றவர்கள் சென்று அவன் தாயாரிடம் செய்தியைக் கூற ஓடி வந்து மகனை தன் மடி மீது வைத்துக் கொள்ள அவள் மடியிலேயேஅவன் மடிந்தான்.
அவன் உடலை மயானத்துக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் எத்தனை முயன்றும் அவன் உடலை நெருப்பினால் எரிக்க முடியவில்லை. அப்போது அவனுடைய தாயாருக்கு சாமி வந்து சாமாயி நெருப்புடன் வந்து அவனுக்கு தீ மூடினால் மட்டுமே அது தீ பிடிக்கும் என்று கூறினாள் . உடனே அனைவரும் சாமாயிக்கு தகவல் அனுப்ப அவளும் யாரிடமாவது நெருப்பை வாங்கிக் கொண்டு வர எண்ணி அனைவரிடமும் சென்று நெருப்பு பானைக் கேட்டாள். ஆனால் எவரும் அவளுக்கு அதை தர முன் வரவில்லை. ஆகவே அவள் சிவகங்கை மன்னனிடம் சென்று கேட்க அவளுடைய துயரத்தைப் புரிந்து கொண்ட மன்னன் அவளுக்கு தங்கத்தினால் ஆன கரண்டியினால் மூன்று முறை எடுத்த நெருப்பை தர அதை அவள் தனது முந்தானையில் முடித்து வைத்துக் கொண்டு சுடுகாட்டுக்குச் சென்றாள். அனைவருடைய கண்களும் ஒரு நிமிடம் குருடாகித் திறந்தன. நெருப்பை குண்டத்தில் போட்டு தீ மூட்டியவள் வல்லாத்தான் குருவியை பிடித்துக் கொண்டு அந்த தீயில் விழுந்து மடிந்தாள். அப்போதுதான் அனைவரும் அவர்கள் இருவரும் தெய்வப் பிறவிகள் என்ற உண்மையை தெரிந்து கொண்டனர். ஆகவே அனைவரும் அவளை தெய்வமாக ஏற்றுக் கொண்டனர். அவர்கள் செருப்பு தைக்கும் இனத்தவர் என்பதினால் தனக்கு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறைதான் விழா எடுக்க வேண்டும் எனவும் அதற்க்கு இடயில் எந்த காரணத்தைக் கொண்டும் அவர்களை எந்த விதத்திலும் வழிபடக் கூடாது எனக் கூறியதினால் அவர்களுக்கு ஆலயம் அமைக்கவில்லை. வைகாசி மாதங்களில் (மே-ஜூன்) மாயக் குருவி தனது கையில் வல்லாத்தான் குருவியை வைத்து இருக்க, சாமாயி தனது இடுப்பில் பானையை வைத்து இருக்கும் கோலத்தில் கிராமத்தின் தென் பகுதியில் வசிக்கும் வேலர் இனத்தவர்களினால் அவர்களின் சிலைகள் செய்யப்பட அதை எடுத்து வந்து பூஜிக்கின்றார்கள்.
அந்த விழாவின் போது திருமணத் தோற்றத்தில் செய்யப்படும் புதிய சிலை அங்கு கொண்டு வரப்பட்டதும் பழைய சிலையை எடுத்து விட்டு அந்த இடத்தில் புதிய சிலையை வைத்து வழிபடுவார்கள். இரவு பதினோரு மணிக்கு பொங்கல் படைக்கப்படும் . இரண்டு நாட்கள் கோலாகாலமாக விழா கொண்டாடப்படும். மூன்றாம் நாளன்று மாயக் குருவியும், சாமாயியும் எரிக்கப்பட்ட இடத்திலும் பொங்கல் படைக்கப்படும். இரண்டு நாட்கள் பல ஆடுகள் பலி தரப்படும். ஆனால் மாயக் குருவியின் வம்சாவளியினரும் சந்ததியினரும் அவர்கள் கொடுத்த வாக்குறுதிப்படி ஆட்டு மாமிசங்களை என்றுமே சாப்பிடுவது இல்லை. அது போல அவர்கள் பாம்புகளையும்கொல்வது இல்லை. அவர்களை பாம்புகளும் ஒன்றும் செய்வது இல்லையாம்.
(Translated into Tamil by Santhipriya )
It's the true story
DeleteNamaskarams. Can we have the contact telephone numbers of this temple. Our forefathers belong to this Mukkudi village.
ReplyDelete