Friday, March 26, 2010

Navaladiar of Mohanur

Navaladiar of Mohanur

By

P.R.Ramachander

Mohanur is a village which is 14 km from Paramathi Velur of Namakkal district. In the eastern boundary of the village is the temple of Navaladi Karuppana Chami., who is referred to also as Navaladiyan. He is also known as Pattamarathan and Judge Durai.
It seems some merchants of the Chera kingdom came to do business with Tamil Nadu. They brought their material on bulls. They also had a cow and calf with them. When they were camping at Mohanur, they noticed that even without milking the udder of the cow used to go dry. They thought that there is some evil spirit in that place and were preparing to depart. On that day they found that their cow was missing. After great search, they located the cow in the forest bush of naval trees (Syzygium cumini (L.)). In spite of the best efforts, the cow did not come out of the bush. At last they found out that the cow was pouring all the milk in its udder at a spot below a naval tree and there was also a stone below the tree. They understood that the stone was divine. Near by there was also a neem tree. Since the stone was below the naval tree, the merchants called that God as Navaladiyar (He who is below the naval tree). They donated the cow and calf to Navaladiyar and went back. Local people started calling the God as Navaladi Karuppu. The local, king called Mogur Pazhayan , used to daily worship this God. Once he observed that milk was coming out of the neem tree nearby. He then made the neem tree as his Security tree. It was also worshipped then afterwards.. The local queen’s brother Nannan , who had the neighboring Viyaloor kingdom used to anoint Navaladiyar with milk , every time he visited his sister. Near Viyaloor , there was another kingdom called Ganga kingdom. The king there was Irungovel. These three kings had complete control of Kongu Nadu (present Coimbatore area) during that time.
In Nannan’s palace there was a mango tree which yielded one fruit , once in 12 years. During the year, it yielded tight security was put to the tree, as the people believed that by eating the fruit people would live a long life. Once there was a cyclone and the fruit fell in a nearby river. One lady who was taking bath in the river ate that mango fruit. Hearing this Nannan sentenced her to death. The local people tried their best to get pardon for the girl , but Nannan did not bother and put the lady to death. The people got angry on Nannan and cut of the mango tree in his palace. Nannan also turned mad. His sister made Nannan pray Navaladiyan three times a day for a period of 40 days. He became all right and went back to his country. Similarly king Irungovel also committed by refusing to marry one of the orphaned daughters of king Pari which made Sage Kapila to give up his life. So Irungovel came to Navaladiyar temple and by praying to him, got his sins excused.
Thus the fame of the God Navaladiyan spread throughout Tamil Nadu. Many other kings were jealous of the king Mogur Pazhayan in whose kingdom Navaladiyar’s shrine was located. One of them was Ayirai. He made a plot so the neem tree which was the security tree of Pazhayan was destroyed.
At this time Villavan kothai who was the Commander in chief of the army of Cheran Chenguttuvan came to worship at the Durga temple in the kingdom of Ayirai . Ayirai went and met the commander and told him that , “ Nannan killed an innocent girl. He should be taken before your king and given proper punishment. “ Villavan Kothai greed to this, He went and met Nannan and told him, “King Cheran Chenguttuvan wants your friendship. His minister is waiting in my country. If you come with me, I will introduce the minister to you,:”. Nannan was attracted by the proposal and accompanied ayirai. He was imprisoned by Ayirai, in his country. Nannan prayed Navaladiyar to rescue him. Then suddenly a tunnel appeared in his jail. He went out through the tunnel and reached his country. Later Pazhayan, Nannan and Irumborai set out to destroy Ayirai. Since Ayirai got information through spies, , in the guise of a woman , he escaped from his country. The three friends conquered the country of Ayirai. They also destroyed the Durga temple.
Ayirai went and met Cheran Chenguttuvan and told lot of lies about the three kings. Cheran decided to wage a war and destroy their country. They managed too kill Pazhayan . Ayirai then wanted to destroy the temple of Navaladiyar. Cheran Chenguttuvan prevented him from doing it. But advised him to cut the neem tree which was guardian of Pazhayan. Ayirai was not satisfied with this,. He shaved off the hair of the queen of Pazhayan and insulted her. The queen cursed him, “Oh rogue , you would be destroyed.” And died t that spot itself. Not satisfied with this Ayirai wanted to destroy Navaladiyan temple. He lifted a huge stone so that he can put it on the temple. A cobra came from underneath the stone and killed Ayirai. Cheran then understood , what a bad man Ayirai was and also the type of lies that was being fed to him. He arranged for the honourable burial of Pazhayan and his queen. Ayiran’s body was thrown as food to the foxes in the forest. He then did redemptive acts to Navaladiyan and returned to his country.
The Navaladiyan statue is now under a new Naval tree (the old dry tree also stands there. This called Patta Maram and hence the name Pattmarathan) which came out of the roots of the old Naval tree. Similarly a new neem tree also has grown up in the place of the old destroyed neem tree.
Once some villagers went for wishing in the near by river. They found a statue floating in the river and recovered it. Since it had the looks of God Chellandiamman of Madhukarai, they consecrated in the same sanctum sanctorum of Navaladiyan. They are calling it Chellandiamman. There are also Kannimar (maids) deivam and Ganesa in the temple. Outside the temple are very big statues of two Bhoothas. The original temple built by Pazhayan was a small one. Now they have rebuilt it but Navaladiyan temple has not been disturbed. There are two big mud horses standing outside the temple now. There is also a horse made of bell metal. Apart from a wooden horse.
There are no festivals for Navaladiyan . But if a devotee pays Rs 3500, Navaladiyan is decorated and taken out as procession. There is a practice of bringing the anointed water to the Uthsava statue and throwing it t the devotees face. It seems this act removes all the problems of the devotee. Opposite the Uthsavar Statue of Navaladiyan, a big Vel has been planted. It is called Shakthi Vel. While Vegetarian dishes are offered to Chellandiamman, animals are sacrificed before Navaladiyar.
This temple is very popular in Namakkal district. Any problem is brought before him for redressal and because of this he is also known as Judge Durai. Any thing can be offered by a devotee to Navaladiyar. For example a cobbler has offered a very big shoe to the God. He hangs it in the tree outside . Every year a new pair is brought and old one replaced. Goats and Cocks are offered to the Navaladiyar. There is also a mid night pooja known as Sathya Poojai ,in the temple.
Devotees also ca submit written requests to Navaladiyar. These should be written or typed and offered along with Rs 5. People believe such requests are heard by Navaladiyar and he fulfills them. These are pierced on several iron rods outside the temple. You may find medical reports , X rays and even ECG reports there.

3 comments:

  1. மேல் கண்ட கட்டுரையின் தமிழாக்கம் கீழே தரப்பட்டு உள்ளது.

    மோகனூர் நாவலடியார்
    பீ. ஆர். ராமச்சந்திரா

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூரில் இருந்து பத்து கிலோ தொலைவில் உள்ளது மோகனூர். அதன் கிழக்கு எல்லைப் பகுதியில் உள்ளதே நாவலடி கருப்பசுவாமி ஆலயம். அதை நாவலடியான் என்றும் கூறுகின்றார்கள். அவரை பட்ட மரத்தான் மற்றும் நீதிபதி துரை என்று கூறுகிறார்கள். ஒரு காலத்தில் சேர நாட்டை சேர்ந்த வணிகர்கள் சிலர் அந்த ஊருக்கு வியாபார விஷயமாக தமது பொருட்களை மாட்டின் மீது ஏற்றி வைத்துக் கொண்டு அங்கு வந்தனர். தங்களுடன் ஒரு பசு மாட்டையும் அதன் கன்றையும் அழைத்து வந்து இருந்தனர். அவர்கள் மோகனூரில் தங்கி இருந்தபோது அந்த மாட்டின் மடி எப்போதுமே வற்றி இருந்ததைக் கண்டார்கள். ஆகவே எதோ ஒரு கெட்ட ஆவி அதன் பாலை சாப்பிட்டு விடுவதாக அவர்கள் நினைத்தனர். அங்கிருந்து கிளம்பிச் செல்ல ஆயத்தம் ஆயினர். ஒரு நாள் மாட்டை காணவில்லை. அதை தேடி போனார்கள். கழ்டப்பட்டு அதை கண்டு பிடித்தனர். அது ஒரு காட்டில் இருந்த நாவால் மரத்து அடியில் ஒரு புதர் மீது நின்று கொண்டு பாலை சுரந்து கொண்டு இருந்தது. அதன் அடியில் ஒரு கல்லும் இருந்தது. ஆகவே அந்தக் கல் தெய்வாம்சம் கொண்டது என நினைத்தனர். அதன் அருகில் ஒரு வேப்ப மரமும் இருந்தது. அந்த கல்லுக்கு நாவலூர் எனப் பெயரிட்டு அதற்கே அந்த பசுவை தானமாக தந்துவிட்டுச் சென்றனர். உள்ளூரில் இருந்தவர்கள் அதை நாவலடி கருப்பு என அழைத்தனர். அந்த ஊரின் மன்னனான மோகூர் பழையன் தினமும் அங்கு வந்து வணங்கலானான். ஒரு நாள் அந்த வேப்ப மரத்தில் இருந்தும் பால் வடிந்ததைக் கண்டான். ஆகவே அதை தனது ஊர் காக்கும் மரமாக அறிவித்து அதை வணங்கத் துவங்கினான். அடுத்த ஊரான வியலூரை ஆண்டு வந்த மோகனூர் மன்னனுடைய மச்சினன் ( மனைவியின் சகோதரன்) நன்னன் என்பவன் அங்கு வரும்போதெல்லாம் அந்த கல்லுக்கு பால் விட்டு அபிஷேகம் செய்து விட்டே செல்வான். அவனுடைய நாட்டின் அடுத்த நாடான கங்காவை ஆண்டு வந்தவன் பெயர் இளங்கோவன். அந்த மூன்று மன்னர்களும் கொங்க நாட்டின் (தற்போதைய கோயம்பதூரின்) முழு அதிகாரத்தையும் தமது கைகளில் வைத்து இருந்தனர்.
    நன்னனின் தோட்டத்தில் ஒரு மா மரம் இருந்தது. அது பன்னிரண்டு வருடத்துக்கு ஒரு முறைதான் பழம் தரும். அதை உண்பவர்கள் பெரும் ஆயுளைப் பெறுவார்கள் என்பதினால் அதற்கு கடுமையான காவல் போட்டு இருந்தனர். ஒரு நாள் அடித்த சூறாவளியில் அந்த மரத்து பழம் அங்கிருந்த நதியில் பறந்து சென்று விழுந்து விட்டது. அதை அங்கு குளித்துக் கொண்டு இருந்தப் பெண் ஒருவள் அதை எடுத்துச் சாப்பிட்டு விட்டாள் . அதைக் கேள்விப்பட்ட மன்னன் அந்த பெண்ணுக்கு மரண தண்டனை விதித்தான். தெரியாமல் செய்து விட்ட பிழையை ஏற்று அவளுக்கு மன்னிப்பு தருமாறு மக்கள் வேண்டினார்கள். ஆனால் அதை மன்னன் ஏற்கவில்லை. அவளை கொன்று விட்டான் . ஆத்திரம் அடைந்த மக்கள் திரண்டு வந்து அந்த மரத்தை வெட்டிவிட்டனர். நன்னனும் பைத்தியமாகி விட்டான். ஆகவே அவனுடைய சகோதரி அவனை நாற்பது நாட்கள் தினமும் மூன்று வேளை நாவலடியாரை வந்து வணங்குமாறு கூறினாள். அவன் நலமடைந்து தன்னுடைய ஊருக்கு சென்று விட்டான். அது போல இளங்கோவனும் பாரி என்ற ஒரு மன்னனின் நாதியற்ற மகளை மணமுடிக்க மறுத்ததினால் அவளை காப்பாற்றி வந்த கபில முனி தற்கொலை செய்து கொண்டார். அதனால் ஏற்பட்ட தோஷங்களை விலக்கிக் கொள்ள இளங்கோவனும் நாவலடியாரை வந்து துதித்தான்.இப்படியாக
    நாவலடியாரின் புகழ் பல இடங்களிலும் பரவியது. அதனால் பொறாமை கொண்ட மன்னர்களில் ஒருவனான 'அய்யரை' என்பவன் நாவலடியாருக்கு அருகில் இருந்த ஊர் காவல் மரமான வேப்ப மரத்தை அழித்து விட்டான்.
    .......continued below

    ReplyDelete
  2. ...continued from above
    அதே நேரத்தில் சேரன் செங்குட்டுவனின் படை தளபதியான வில்லவன் கோதை என்பவர் 'அய்யரி'ன் நாட்டுக்கு வந்து அங்கிருந்த துர்கா தேவியை வணங்கி விட்டுச் சென்றான். அவனை சந்தித்த 'அய்யரை' பக்கத்து நாட்டு மன்னன் நன்னன் ஒரு தவறு இழைக்காத பெண்ணை கொன்று விட்டன எனவும் அவனை தண்டிக்க வேண்டும் என்றும் அவனிடம் கேட்டுக் கொண்டான். வில்லவன் கோதை நன்னனிடம் சென்று மன்னன் சேரன் செங்குட்டவன் அவனுடன் நட்பாக இருக்க விரும்புவதாகவும் தனது நாட்டுக்கு வருமாறும் அழைத்தான். அவனை நம்பிய நன்னனும் அவனுடன் கிளம்பிச் சென்றான். நன்னனை அய்யரிடம் ஒப்படைத்தான் . நன்னன் சிறையில் அடைக்கப்பட நன்னன் தன்னைக் காக்குமாறு நாவலடியாரை வேண்டினான். அன்று இரவு அவன் சிறை வைக்கப்பட்டு இருந்த சிறையின் அடியில் ஒரு சுரங்கம் தோன்றியது. அதில் இறங்கி நன்னன் தப்பி ஓடி தனது நாட்டை அடைந்தான். ஆகவே பழையன் , நன்னன் மற்றும் இரும்பொறை என்ற மூவரும் 'அய்யரை' அழிக்க கிளம்பிச் சென்றனர். அவர்கள் வருவதை அறிந்து கொண்ட 'அய்யரை' தப்பி ஓடினான். வந்த மூவரும் அங்கிருந்த துர்கா தேவி ஆலயத்தை நாசம் செய்துவிட்டனர்.

    அங்கிருந்து தப்பி ஓடிய 'அய்யரை' சேரன் செங்குட்டவனிடம் சென்று அந்த மூன்று மன்னர்களைப் பற்றியும் இல்லாததையும் பொல்லாததையும் கூற கோபமுற்ற அவன் அவர்கள் மீது படையெடுத்து வந்தான். சண்டையில் பழையன் கொல்லப்பட்டான். நாவலடியார் ஆலயத்தையும் அழிக்குமாறு 'அய்யரை' செங்குட்டுவனிடம் கூற அதை செய்யாதே என தடுத்தவன் வேண்டுமானால் அந்த வேப்ப மரத்தை வெட்டிவிடுமாறு கூறினான். ஆனால் கோபம் குறையாத 'அய்யரை ' பழையனுடைய மனைவியை சிறை பிடித்து அவள் தலை முடியையும் அறுத்து மொட்டை அடித்தான் . அந்த அவமானத்தை தாங்க முடியாமல் அவள் தற்கொலை செய்து கொண்டாள். செங்குட்டுவன் கூறியும் கேட்காமல் நாவலடியார் ஆலயத்தை இடித்துத் தள்ள முடிவெடுத்த 'அய்யரை' ஒரு பாறாங்கல்லைத் தூக்கியபோது அதன் அடியில் இருந்து வெளியில்வந்த பெரிய பாம்பு கடித்து அவன் இறந்து விழுந்தான். அதன் பின்னால்தான் சேரன் செங்குட்டுவனுக்கு 'அய்யரை' தன்னிடம் கூறி இருந்த அனைத்து தவறான செய்திகளைப் பற்றியும் அறிய முடிந்தது. ஆகவே அவன் மனம் வருந்தி பழையன் மற்றும் அவன் மனைவிக்கு நல்ல மரியாதையுடன் கூடிய இறுதி சடங்குகளை செய்ய வைத்து 'அய்யரை'யை வெட்டி துண்டாக்கி அதை நரிகளுக்கு உணவாகப் போட ஏற்பாடு செய்தான். நாவலடியாரின் ஆலயத்துக்கும் தேவையானவற்றை செய்து விட்டு நாடு திரும்பினான். நாவலடியாரின் சிலையை பழைய நாவல் மரத்து வேரில் இருந்து தோன்றிய இன்னொரு நாவல் மரத்தடியில் வைத்து உள்ளார்கள். பழைய நாவல் மரமும் அங்கு உள்ளது. பழைய மரம் பட்டுப் போனதினால் அந்த சிலை பட்டமரத்தான் ( பட்டுப் போன மரத்தின் அடியில் இருந்ததினால் ) என்ற பெயர் கொண்டது. வெட்டப்பட்ட வேப்ப மரமும் வளர்ந்து விட்டது.
    ....continued below

    ReplyDelete
  3. ...continued from above
    ஒரு நாள் அந்த கிராமத்தினர் நதியில் குளிக்கச் சென்றபோது அதில் ஒரு சிலை மிதந்து வந்ததைக் கண்டனர் . அது மதுக்கரை செல்லாண்டியம்மன் என்பதினால் அதை நாவலடியாரின் கர்பகிரகத்தின் அருகிலேயே வைத்தனர். மேலும் சப்த கன்னிமார்களும், விநாயகரும் அந்த ஆலயத்தில் உள்ளனர். ஆலயத்துக்கு வெளியில் இரண்டு பெரிய பூதங்கள் உள்ளன. பழையன் கட்டி இருந்து பழைய ஆலயமும் இடிக்கப்படாமல் அங்கு உள்ளது. ஆலயத்தில் மரத்தில் செய்யப்பட்ட இரண்டு குதிரைகளும் மண்ணினால் செய்யப்பட்ட குதிரைகளும் உள்ளன.

    நாவலடியாருக்கு விழா எடுப்பது இல்லை. ஆனால் எவராவது 3500 ரூபாய் தந்தால் அதை ஊர்வலமாக எடுத்து வருவார்கள். ஆலயத்து மூர்த்தியை அபிஷேகம் செய்த நீரை எடுத்து வந்து பக்தர்களின் முகத்தின் மீது தெளிப்பார்கள். அப்படி செய்தால் அவர்களது குறைகள் தீருமாம். நாவலடியாரின் உற்சவ மூர்த்திக்கு எதிரில் ஒரு வேல் வைக்கப்பட்டு உள்ளது. அதை சக்தி வேல் என்று கூறுகிறார்கள் செல்லாண்டி அம்மனுக்கு சைவ உணவே நைவித்தியமாகவும் நாவலடியாருக்கு மிருக பலியும் தரப் படுகின்றது.
    நாமக்கல்லில் அந்த ஆலயம் பிரசத்தி பெற்றது. அவர் நீதிபதி துரை என்பதினால் அனைத்து விவகாரங்களும் அவரிடம் எடுத்துச் சென்றால் நல்லமுறையில் தீர்ந்து விடுமாம். எவர் வேண்டுமானாலும் எதையும் அவருக்கு காணிக்கையாக தரலாமாம். ஒரு முறை ஒரு செருப்பு தைப்பவன் அவருக்கு காணிக்கையாக ஒரு பெரிய செருப்பை தைத்துத் தர அதை ஆலயத்தின் வெளியில் உள்ள மரத்தில் தொங்க விட்டு உள்ளனர். ஒவ்வொரு வருடமும் அதை மாற்றிவிட்டு புதிய செருப்பை வைகின்றார்கள். ஆடுகள் மற்றும் கோழிகளை நாவலடியாருக்கு பலியாகத் தருகிறார்கள். சத்ய பூஜை என்ற பெயரில் நாடு இரவில் பூஜை நடை பெறுகின்றது.
    நாவலடியாருக்கு தமது குறைகளை எழுதியும் வைகின்றார்கள். அதை டைபிங் செய்து ஐந்து ரூபாயுடன் வைக்க வேண்டும். அந்த வேண்டுகோள் பலிக்கின்றது என்று கூறுகிறார்கள். அது போல எக்ஸ்ரே ரிப்போர்ட், மருத்துவ ரிப்போர்ட்டுகள் கூட வைக்கப்படுகின்றதாம்.

    (Translated into Tamil by Santhipriya )

    ReplyDelete