Wednesday, March 24, 2010

Kurathi Amman of Anaivari village

Kurathi Amman of Anaivari village

By

P.R.Ramachander


Anaivari is a village which is 18 km from Pudukottai. Kurathi Amman has a temple in this village. There is an interesting story about this village, which goes back to the Ramayana. It seems when Sita was kidnapped by Ravana, Lakshmana and Rama went is search of her. Sage Valmiki who was in the forest accompanied them. They happened to come to Anaivari village. Somehow, sage Valmiki liked the village very much and decided to stay there. Rama and Lakshmana continued their search. Valmiki who did penance in the village, over time became a God to the village and settled there, the villagers started calling this God as Mayavar.
Kuravan is a nomadic tribe of Tamilnadu. They tell astrological l predictions, sell knick knacks like needle etc. If their woman (called Kurathi) stays outside their camp for one night, they used to murder them. Once seven Kurathis along with their babies missed their way and stayed for a night in the forest near Anaivari. The men of their group murdered all the seven woman along with their babies. It seems they appeared in the dream of a villager and told them, that if they consecrate them as Gods in the village and worship them, they would look after the village. The villages agreed and consecrated their statue near Mayavar temple. They were called by the villagers as Kurathi Amman.
After this one Kudukuduppai karan (a beggar who tell that he lives in the burial ground and foretells future of people accompanied by a drum in the morning) once stole the Thali (Mangalya Sutra) of a woman of the village. It seems immediately he became blind. People said that this was done by Kurathi Amman. He immediately came to her temple, kept the Thali at Kurathi Amman’s feet and begged forgiveness. Kurathi Amman pardoned him and restored his sight. From that time no thief has come to the village. The villagers also appointed the Kudukuduppai Karan as their police man. They gave him some grain as compensation during harvest. Now Kudukuduppai karan does not does police duty in the village but some of them come during harvest to collect the grain. Even simple things like hair pin which falls in the streets are not touched by anybody. Since Kurathi Amman is their God, if at any time a Kuravan comes to the village he is treated properly and given food. These seven Kurathi women stand on the left side of Mayavar. On his right side, Chinna Karuppar, Perriya Karuppar and Otha Mani Karuppar statues are there. A story is there about Otha Mani karuppar.
It seems once some villagers, who went to an outside market town caught hold of a goat and cut it and were preparing to cook it. At that time the owner of the goat came there. Recognizing him the villagers put the meat of the goat in a box. When the owner wanted to see what is inside the box, they were forced to open it. But the colour of the goat had completely changed and the owner said sorry and went his way. Then Otha Mani Karuppar entered one of them and told,”I have saved you. So build a temple for me also.” Thy built a temple for him near the existing temple of Kurathi Amman.
Another peculiarity of this village is that all statues of their God are made of Mud. When they break or get dilapidated, they build a new statue. This is done with a grand celebration. On all Mondays and Fridays, Kurathi Ammans are worshipped by preparing Pongal.
All girls of the village, who get married to an outside villagers, give three fifty rupees and seven measures (Marakkal) of paddy to the Kurathi Amman. This is given in a rope box. The paddy from this box is made in to rice and Pongal made out of it is offered to Kurathi Amman. A part of the pongal is given to the girl, to take it to her husband’s home.
People of the village believe that orders of Mayavar are executed by Kurathi Ammans. There is a pond on the way to the temple. People who have complaints against any body else and take bath in this pond and go the temple of Kurathi Amman with wet cloths. They pay Rupees twelve and Paisa twenty five at the temple. They believe that Kurathi Amman would punish the guilty. If a man outside the village makes such complaints he should observe silence till he crosses the village boundary.

4 comments:

  1. மேல் கண்ட கட்டுரையின் தமிழாக்கம் கீழே தரப்பட்டு உள்ளது.

    ஆனைவாரிக் குறத்தி அம்மன்
    பீ. ஆர். ராமச்சந்திரா

    புதுக்கோட்டையில் இருந்து பதினெட்டு கிலோ தொலைவில் உள்ளது ஆனைவாரி கிராமம். அங்குதான் குறத்தி அம்மனுக்கு ஒரு ஆலயம் உள்ளது. இராமாயண காலத்தை சார்ந்த கதையை அந்த கோவிலுக்கு ஆதாரமாகக் கூறுகின்றார்கள். சீதையை ராவணன் கவர்ந்துகொண்டு சென்றபோது ராமரும் லஷ்மணரும் அவளைத் தேடி அங்கு வந்தனர். வால்மீகியும் அவர்களுடன் சேர்ந்து வந்தார். அவர்கள் அனைவரும் ஆனைவாரி கிராமத்துக்கு வந்தனர். வால்மீகிக்கு அந்த இடம் பிடித்துப் போய் விட்டதினால் அவர் அங்கேயே தங்கி விட்டார். ராமரும் லஷ்மணரும் தேடுதல் வேட்டையில் இருந்தனர். வால்மீகி பல காலம் அங்கேயே இருந்து அந்த ஊரின் கடவுளாக மாறி விட்டார் . அவரை மாயனார் என அழைத்துஅவருக்கு ஆலயம் அமைத்தனர்.
    தமிழ்நாட்டில் குறவர்கள் இனம் உண்டு . அவர்கள் குறி சொல்லிப் பிழைப்பவர்கள். அவர்களில் பெண் குறத்திகள் பாசி மணிகளை நூலில் கோர்த்து விற்பவர்கள். அவர்கள் எங்கு சென்றாலும் வேறு எங்கும் இரவில் தங்கக் கூடாது. வீடு வந்து சேர்ந்து விட வேண்டும். அப்படி வராவிடில் மறுநாள் அவளை கொன்று விடுவார்கள். ஒரு முறை ஏழு குறத்திகள் வெளியில் போய்விட்டு வரும்போது வழி தவறி தமது குழந்தைகளுடன் ஆனைவாரி கிராமத்துக்கு வந்துவிட்டனர். அவர்களைக் கண்டுபிடித்த குறவர்கள் அவர்களை அவர்களது குழந்தைகளுடன் கொன்றுவிட்டனர். ஒரு நாள் அந்த குறத்திகள் ஒரு கிராமத்தானின் கனவில் தோன்றி அவர்களுக்கு அந்த ஊரில் ஒரு ஆலயம் எழுப்பி தெய்வமாக அவர்களை வணங்கினால் அவர்களைப் பாதுகாப்பதாக உறுதி தந்தனர். ஆகவே அதை ஏற்றுக் கொண்ட கிராமத்தினர் குறத்தி அம்மன் ஆலயத்தை மாயனார் ஆலயத்தின் அருகிலேயே அமைத்தனர்.
    .....continued below

    ReplyDelete
    Replies
    1. எந்த ஊரில் குறி சொல்லும் குறிஞ்சிநிலக் குறவர்கள் ஊசி, மணி, பாசி விற்கிறார்கள்??

      ஊசி, மணி, பாசி விற்பவர்கள் மராட்டிய நரிக்காரர்கள், அவர்களுக்கும் குறிஞ்சிநிலக் குறவர் இனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை!!

      ஊசி, மணி, பாசி விற்கும் மராட்டிய நரிக்காரனின் உண்மையான பெயர் நக்களா, குறவர் அல்ல அவர்கள்!!

      வால்மீகி காலத்தில் வாழ்ந்தவர்கள் குறிஞ்சிநிலக் குறவர்கள் தான், மராட்டிய வாக்ரிவாலா மொழி பேசும் நக்களா இனத்தவர்கள் அல்ல!!

      Delete
  2. ..continued from above
    ஒரு முறை ஒரு குடுகுடுப்பைக்காரன் அந்த ஊருக்கு வந்து ( சுடுகாடுகளில் வசிக்கும் சிலர் விடியற்காலை வந்து உடுக்கை அடித்தபடி வருங்காலத்தைப் பற்றி உரத்த குரலில் வாயிலில் நின்று கூறி விட்டுச் செல்பவன்) ஒருவளுடைய தாலியை திருடிவிட்டான். அவன் உடனே குருடனாகி விட்டான். கிராமத்தினர் குறத்தி அம்மனே அவனை குருடனாக்கி உள்ளாள் என நம்பினார்கள் . அந்த குடுகுடுப்பைக்காரன் அந்த ஆலயத்துக்கு வந்து தான் திருடிய தாலியை அந்த அம்மன் முன் வந்து வைத்து மன்னிப்பு கேட்க இழந்த பார்வை அவனுக்கு திரும்ப வந்ததாம். அது முதல் அந்த கிராமத்தில் திருட்டு பயம் ஒழிந்தது. அவர்கள் கிராமத்து காவல்காரனாக குடுகுடுப்பைக்காரனயே நியமித்தனர். அவர்களுக்கு கூலியாக நிலங்களை அறுவடை செய்யும்போது நெல்லை தந்தனர். இப்போதெல்லாம் குடுகுடுப்பைக்காரன் காவலாளியாக இல்லை என்றாலும் அவர்கள் கூலியான வருடாந்தர நெல்லை பெற்றுக்கொண்டு செல்கின்றார்கள். குறத்தி அம்மன் மீதான பயத்தினால் தெருவில் தலைக்கு வைக்கும் பின் விழுந்தால் கூட எவரும் அதை எடுப்பது இல்லை. குறவர்கள் அங்கு வந்தால் அவர்களுக்கு உணவு தந்து அனுப்புகின்றனர். மாயனாருக்கு இடதுபுறத்தில் அந்த ஏழு குறத்திகளும் நிற்கின்றனர். அவருக்கு வலது புறத்தில் சின்ன கறுப்பர், பெரிய கறுப்பர், ஒத்தை மணி கறுப்பர் போன்றோர் உள்ளனர். ஒத்தைமணிக் கறுப்பர் பற்றியும் ஒரு கதை உள்ளது.
    ஒரு முறை சில கிராமத்தினர் ஒரு ஆட்டை எங்கிருந்தோ பிடித்துக் கொண்டு வந்து அதை வெட்டி சமைக்கத் துவங்கினார்கள். அந்த ஆட்டை தேடி அதன் சொந்தக்காரன் வந்தான். அதன் நிறத்தைப் பார்த்து தொலைந்து போன தன்னுடைய ஆட்டின் அடையாளத்தைக் கண்டு பிடித்து விடுவான் என கிராமத்தினர் பயந்தனர். வெட்டிய ஆட்டை ஒரு பெட்டியில் வைத்து மூடிவிட்டனர். ஆட்டைத் தேடி வந்தவன் அந்த பெட்டியில் உள்ளதை திறந்து காட்டுமாறு கூறி அதைத் திறக்க அந்த ஆட்டின் நிறம் வேறாக இருந்ததாம். ஆகவே வந்தவர் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு விட்டு சென்றனர். அப்போது உள்ளே வந்த ஒத்தமணிக் கருப்பன் தான்தான் அவர்களை காப்பாற்றியதாகவும் தனக்கும் ஒரு ஆலயம் வேண்டும் எனவும் கூற குறத்தி அம்மன் ஆலயத்தின் பக்கத்திலேயே அவருக்கும் ஆலயம் அமைத்தனர்.
    இன்னொரு விசித்திரம் என்னென்றால் அந்த சிலைகள் அனைத்துமே மண்ணினால் செய்யப்பட்டவை. அவை உடைந்து விட்டாலோ சேதம் அடைந்து விட்டாலோ வேறு ஒரு சிலையை செய்து வைத்து விடுவார்கள். அப்போது அதை பெரிய விழாவாக கொண்டாடுவார்கள். திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அம்மனுக்கு பொங்கல் படைகின்றனர். வெளியூருக்கு திருமணம் ஆகிச் செல்லும் பெண்கள் அம்மனுக்கு ஐம்பது ரூபாயும் ஏழு மரக்கால் நெல்லையும் தர வேண்டும். அதை கயிற்றினால் செய்த பெட்டியில் வைத்துக் கொடுக்க வேண்டும். அந்த நெல்லை உடைத்து அந்த அரிசியில் பொங்கல் வைத்து நைவித்தியம் செய்கின்றனர். அதில் சிறிது அவளுடைய மாமனார் வீட்டுக்கு அனுப்பப்படுகின்றது.
    ஆலயத்தின் அருகில் ஒரு குளம் உள்ளது. மாயனார் இடும் கட்டளையை குறத்தி அம்மன் நிறைவேற்றுவதான ஐதீகம் உள்ளது. தவறு செய்தவர்கள் மீது குற்றம் சாட்டுபவர்கள் அந்த குளத்தில் சென்று குளித்து விட்டு ஈர துணியுடன் ஆலயத்துக்கு சென்று பன்னிரண்டு ரூபாயும் இருபத்தி ஐந்து பைசாவையும் குறத்தி அம்மனுக்கு தானமாகப் போட்டால் தவறு செய்பவர் தண்டிக்கப்படுவார் என்பது நம்பிக்கை. அப்படி அடுத்த ஊரை சார்ந்தவர் வந்து வேண்டுதல் செய்தால் அவர் அந்த ஊரின் எல்லையைக் கடக்கும்வரை மெளனமாக இருக்க வேண்டும். எவருடனும் பேசக் கூடாது .
    (Translated into Tamil by Santhipriya )

    ReplyDelete
  3. நரிக்காரத்திக்கு தமிழே ஒழுங்கா பேசத் தெரியாது அவ எப்படி டா குறி சொல்லூவா வரலாறை தவறாக பதிவிட்டு தமிழர் தாய்குடியான குறவர் இனத்தை ஏன்டா அழிக்கிறீங்க

    ReplyDelete