Thursday, March 25, 2010

Pirandi Ayyanar of Chelliyampatti

Pirandi Ayyanar of Chelliyampatti

By

P.R.Ramachander

Chelliyampatti is a small village near Piran Malai of Shiva Ganga district. The God who guards this village is Pirandi Ayyanar.
About 700 years back about 200 people of the same joint family migrated to south from North India. Along them with them was Brahmin youth who used to assist them and his sister.
They settled in the Vanniya country. There was a king of Vali country in this state. Once he happened to see a pretty girl of this group and fell in love with her. He sent his emissaries with a proposal for the marriage. Since he was the king, the people of this family could not tell no to him. But the girl did not like to marry the king. So they went on making preparations for the marriage publicly but were also packing of their things to go away from there. When their preparation for departure was over, they put all the ornaments that they made for the bride on a dog’s neck and departed from there and hastily started going away. The Brahmin lad and his sister accompanied them. Mean while the king with his army found about their duplicity and started chasing them. The family reached a river shore which was in floods. They prayed God to save them. He told them to kick a Vanni tree. They kicked a big Vanni tree on the shore. It well across the river another tree from the opposite shore also fell. The family crossed the river on this god given bridge. Unfortunately the sister of the Brahmin lad fell in to the water and died. They consoled the Brahmin youth and went on traveling from place to place. The Brahmin youth also died. That family thought that the Brahmin youth and his sister were their Gods. . At night wherever they stayed, they use to powder rice and make a ball and offer it to the Brahmin youth. For this they had with them an Ammi (flat granite stone) and a kuzhavi (Pestle). One day when they camped in the forest, they found that the Kuzhavi was missing. Since without offering the rice ball, none of them took food, they started a vigorous search. At last they found the Kuzhavi in an upright poison in the middle of the forest. When they tried to lift it, it told , “I like this place. I want to live here.” Because of this they thought that the Kuzhavi was the Brahmin youth , and constructed a temple for him. They also built houses for themselves and started calling their God as Pirandi Ayyanar. They also made a statue for his sister. When they dug a pond (chengai ) for drinking water, they saw that a tamarind tree started growing near by. Some dogs started howling and scratching the soil near by. So they thought that both the pond as well as the tamarind tree were divine. They started calling the pond as Bhairava Chengai and the tree as Bhairava Chengai puli. Even today this tree is alive,. They also made a mound , in which they buried all their wealth and ornaments and started calling it as Dindodharan Medu. Some black magicians tried to steel these treasures., then the Aandi deivam which was also consecrated at the temple went to Kerala and brought Malayala Karuppu to help them. Malayala Karuppu destroyed the magicians. When he wanted to go away, the other Gods in the temple requested him to be with them. He was reluctant but when he was told that he would also be worshipped, he hose o stay with them not in the temple but near a pond which was at a short distance. He was initially staying in a crab hole., one lady without knowing this introduced her hand in the hole. Then Malayala Karuppu ordered her to worship him. She was doing it regularly on all Fridays. But after a few days she entrusted the job to a boy who had come to graze goats. Till today his descendents are the priests in the temple of Karuppu,
A statue and a temple for Malayala Karuppu has been built in the temple complex of Pirandi Ayyanar. There are seven maidens and Chinna Karuppu temples also. Besides there are 21 Hanuman statutes ,sixty army gods and twenty seven thavasi gods , who are all represented by mounds. There is also a Ganapathi temple.
There are no annual festival for the Ayyanar. If he permits there is a horse offering festival in some years. During that time animals are sacrificed to Malayala Karuppu in which only males participate.
People belied that Pirandi Ayyanar would solve their problems , even before they reach back their homes.

2 comments:

  1. மேல் கண்ட கட்டுரையின் தமிழாக்கம் கீழே தரப்பட்டு உள்ளது.

    செல்லியாம்பட்டி பிராண்டி ஐயனார்
    பீ. ஆர். ராமச்சந்திரா

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிரண் மலைக்கு அருகில் உள்ளது செல்லியாம்பட்டி கிராமம் . அந்த கிராமத்து தேவதை பிராண்டி ஐயனார். எழுநூறு வருடங்கள் முன்பு அந்த ஊரில் இருநூறு குடும்பத்தினர் ஒரே குழுவாக அங்கு வந்து வாழ்ந்தனர். அவர்களுடன் ஒரு ஏழை பிராமணனும் அவனுடைய சகோதரியும் இருந்தார்கள். அவர்கள் வன்னியர்கள் இருந்த பகுதியில் வந்து குடியேறினார்கள் . அந்த இடத்தை வல்லி என்ற இனத்தை சேர்ந்த மன்னன் ஆண்டு வந்தான். ஒரு முறை அவன் அங்கு வந்து குடியேறி இருந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களது ஒரு பெண்ணின் அழகின் மீது மயங்கி அவளை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டான். அதற்காக ஒரு தூதுவனை அனுப்பினான். அவன் மன்னன் என்பதினால் அதை அவர்களால் தட்ட முடியவில்லை. ஆனால் அந்த பெண்ணுக்கோ அவனை மணப்பதில் விருப்பம் இல்லை. அதை அவனிடம் கூற முடியாததினால் அவர்கள் திருமண ஏற்பாடுகளை செய்வது போல இருந்து கொண்டு அவளுக்கு திருமணத்துக்கு செய்த நகைகளை ஒரு நாயின் கழுத்தில் போட்டுவிட்டு இரவோடு இரவாக அங்கிருந்து அனைவரும் கிளம்பி வேறு இடத்துக்குச் செல்லத் துவங்கினார்கள். அவர்களது அந்த திருட்டுத்தனத்தை கண்டு பிடித்து விட்ட மன்னன் அவர்களைப் பிடிக்க தனது படையினரை அனுப்பினான். அந்த குழுவினர் ஒரு நதிக் கரையை அடைந்தனர். அந்த நதியிலோ வெள்ளம் ஓடிக்கொண்டு இருந்தது. தம்மை துரத்தி வரும் படையினரிடம் இருந்து தம்மைக் காப்பாற்றுமாறு அவர்கள் கடவுளை வேண்ட அவர்களை அங்கிருந்த ஒரு வன்னி மரத்தை எட்டி உதைக்குமாறு அவர் கூறினார். அவர்களும் அதை செய்ய எட்டி உதைக்கப்பட்ட அந்த மரம் ஆற்றில் விழுந்தது. அதே நேரத்தில் எதிர் கரையில் இருந்த இன்னொரு வன்னி மரமும் அதே இடத்தில் விழ இரண்டும் சேர்ந்து அவர்களுக்கு ஆற்றை கடக்க பாலம் போல ஆகி உதவியது. அனைவரும் ஆற்றை கடந்து விட்டனர். ஆனால் அப்போது கால் இடறி பிராமணனின் சகோதரி அந்த ஆற்றில் விழுந்து இறந்து விட்டாள். அவர்கள் அந்த பிராமண இளைஜனை தேற்றினார்கள். இடமிடமாக அவர்கள் அலைந்து திரிந்தனர். சில நாளில் அந்த பிராமணனும் இறந்து விட அவர்கள் அந்த பிராமணனும் அவன் சகோதரியுமே தங்களுடைய கடவுள் என எண்ணினார்கள். தினமும் அவர்கள் தாங்கள் எடுத்து வந்திருந்த அம்மியில் குழவியினால் அரைத்த அரிசி மாவில் செய்த உருண்டையை அந்த இறந்து போன பிராமணர்களுக்கு நைவித்தியமாகத் தந்த பின்னரே உணவு அருந்துவார்கள். ஒரு நாள் அந்த அம்மிக் குழவியைக் காணவில்லை. மாவு அரைத்து நைவித்தியம் செய்யாமல் எப்படி சாப்பிடுவது என அதை தேடி அலைந்தனர். கடைசியாக அவர்கள் அந்த குழவி அவர்கள் தங்கி இருந்த காட்டின் மத்தியில் ஒரு இடத்தில் பூமியில் புதைந்து இருந்ததைக் கண்டார்கள். அதை எடுக்க முனைந்தபோது ஒரு குரல் தனக்கு அந்த இடம் பிடித்து உள்ளதாகவும், தன் அங்கயே இருக்க விரும்புவதாகவும் கூற அவர்கள் அங்கு அந்த பிராமணனுக்கு அங்கயே ஆலயம் அமைத்து பிறாண்டி ஐயனார் என்ற பெயரில் வழிபட்டனர். அவனுடைய சகோதரிக்கும் ஒரு சிலையை வைத்தனர். அதன் அருகில் குளத்தைத் தோண்டினர். அதன் அருகில் விரைவாகவே ஒரு புளிய மரமும் வளர்ந்தது. அந்த இடத்தில் வந்த நாய்கள் குறைத்து ஓலம் எழுப்பி அந்த இடங்களில் இருந்த மண்ணைத் தோண்டின. ஆகவே அந்த இடம் மகிமை வாய்ந்தது என கருதப்பட்டது. அந்த குளத்தை பைரவ செங்கை என்றும், புளிய மரத்தை பைரவ புளி மரம் எனவும் அழைத்தனர். அந்த மரம் உள்ள அந்த இடத்தை புனிதமாகக் கருதியதினால் தமது அனைத்து செல்வத்தையும் ஒரு குழி தோண்டி அங்கு புதைத்து மேடாக்கி வைத்தனர். அந்த மேட்டை திந்தோதரன் மேடு என அழைத்தனர். அதை கேள்விப்பட்ட சில மந்திரவாதிகள் அதை அடைய முயன்றனர். அந்த ஆலயத்தில் இருந்த ஆண்டி தெய்வம் கேரளாவுக்குச் சென்று மலையாளக் கருப்பை அழைத்து வந்தது. மந்திரவாதிகளை மலையாளக் கருப்பு அழித்துவிட்டது.
    ...continued below

    ReplyDelete
  2. .....continued from above
    ஆகவே அவர் அங்கு தங்கி தங்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வேண்டினார்கள். அவருக்கு அதில் விருப்பம் இல்லை. அங்கு தங்கினால் தாங்கள் அவரையும் வழிபடுவோம் எனக் கூற அதற்கு அவர் ஒப்புக் கொண்டார் . ஆலயத்தை தள்ளி இருந்த ஒரு குளத்தின் அருகில் தாம் குடி இருப்பேன் என்றார் . முதலில் அவர் ஒரு தவளையின் பொந்தில் குடி இருந்தார். அதை அறியாத ஒருவள் அந்த பொந்தில் கை விட்டு விட அதனால் அங்கேயே தம்மை வழிபடுமாறு மலையாளக் கருப்பு கூறினார். அது முதல் வெள்ளிக் கிழமைகளில் அவள் அங்கு சென்று அவரை வணங்கி வந்தாள். நாளாடைவில் அந்த வழக்கத்தை ஒரு ஆட்டு இடையனிடம் அவள் ஒப்படைக்க அவனுடைய வம்சாவளியினரே இப்போது அதை செய்து வருகின்றார்கள்.
    பிராண்டி ஆலய வளாகத்துக்குள் மலையாள கருப்புக்கு ஒரு சிலை வைக்கப்பட்டு ஆலயம் அமைக்கப்பட்டு உள்ளது . அதைத் தவிர சப்த கன்னிகைகள், சின்ன கருப்பு போன்றோருக்கும் ஆலயம் உள்ளன. அவற்றைத் தவிர இருபத்தியோரு ஹனுமான் சிலைகள், அறுபது தெய்வ படைகள் , இருபத்தியோறு தவசி தெய்வங்கள் போன்றவர்களும், விநாயகரும் உள்ளனர். ஐயனாருக்கு வருடாந்திர விழா எடுப்பது இல்லை. அவர் விரும்பினால் மட்டுமே எப்போதாவது குதிரை காணிக்கையாகத் தரப்படுகின்றது. மலையாள கருப்புக்கு மிருக பலிகள் தரப்படுகின்றன. ஆலயத்துக்கு சென்று திரும்பும் முன்னரே தமது குறைகளை பிராண்டி ஐயனார் களைவதாக கிராமத்தினர் கருதுகிறார்கள்.
    (Translated into Tamil by Santhipriya )

    ReplyDelete